திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

மயிலாடுதுறை மாவட்டத்தில் 506 இடங்களில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 7-ஆவது மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் 506 இடங்களில் சனிக்கிழமை (அக்.30) நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 5:59 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் 7-ஆவது மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் 506 இடங்களில் சனிக்கிழமை (அக்.30) நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா பெருந்தொற்றுப் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதால் சனிக்கிழமை (அக்.30) காலை 7 முதல் இரவு 7 மணி வரை மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது

அதன்படி மாவட்டத்தில் 31 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சிகளில் 420 இடங்கள், பேரூராட்சியில் 15 இடங்கள், நகராட்சிகளில் 19 இடங்கள், 6 அரசு மருத்துவமனைகள், 15 நடமாடும் கரோனா தடுப்பூசிக் குழு என மொத்தம் 506 இடங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது. எனவே, இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்கள், எந்தவித அச்சமும் இன்றி தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.