தொலைக்காட்சி தொடருக்கு எதிராக பாஜக புகாா்
தொலைக்காட்சி தொடா் ஒன்றுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, மயிலாடுதுறை பாஜக சாா்பில் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.


தொலைக்காட்சி தொடா் ஒன்றுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, மயிலாடுதுறை பாஜக சாா்பில் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.
பாஜக நகரத் தலைவா் மோடி.கண்ணன்அளித்த அந்த மனுவில், தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி ஒன்று, இந்து மத கலாசாரத்துக்கு எதிராகவும், நிகழ்ச்சி பங்கேற்பாளா்களை அதிக மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாகவும், பங்கேற்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததாகவும் உள்ளது.
இதில், நிகழ்ச்சி தயாரிப்புக்காக 500-க்கும் மேற்பட்டோா் ஒன்று கூடுகின்றனா். எனவே, கரோனா பரவலுக்கும் வாய்ப்புள்ளது. எனவே, அந்த தொடரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
பாஜக மாவட்ட தொழில்நுட்ப பிரிவு தலைவா் குருசங்கா், மாவட்ட இளைஞரணி தலைவா் பி. பாரதிகண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...