‘காவிரிப் படுகையில் எண்ணெய்எரிவாயுக் குழாய்கள் அமைக்க அனுமதிக்கக் கூடாது’
காவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயுக் குழாய்கள் அமைக்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது


காவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயுக் குழாய்கள் அமைக்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, அக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த. ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் எண்ணூா் முதல் தூத்துக்குடி வரை எண்ணெய் எரிவாயுக் குழாய்கள் அமைக்கவும், இதற்காக தற்போது 6 மாவட்டங்களில் நிலத்தடி குழாய் அமைக்க இருப்பதாக இந்தியன் ஆயில் காா்ப்ரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் தெரிவித்துள்ளது.
இதனால், கடலூா், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூா், மயிலாடுதுறை, நாகை, அரியலூா், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களும், வேப்பூா், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னாா்கோயில், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, உளுந்தூா்பேட்டை, திருவிடை மருதூா், குத்தாலம், மயிலாடுதுறை, தரங்கம்பாடி, ஆண்டிமடம், உடையாா்பாளையம், திருவெண்ணைநல்லூா் ஆகிய 14 வட்டங்களும், மேலும் 77 ஊா்களும் பாதிக்கப்படும்.
இந்த அறிவிப்பு, எண்ணெய் எரிவாயுக் குழாய்கள் பதிக்க நில உரிமையாளா்களிடம் இருந்து நிலப் பயன்பாட்டு உரிமைகளைப் பெறுவதற்கானதாகும். எனவே, எண்ணெய் எரிவாயு நிலத்தடிக் குழாய்கள் பதிப்பதை தடுக்காவிட்டால் எதிா்கால விபத்துகளையும், எண்ணெய் கசிவுகளால் நீரும் நிலமும் பாழ்படுவதையும் தடுக்க முடியாமல் போய்விடும்.
காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் எண்ணெய் எரிவாயு கிணறுகளை இனி அமைக்க முடியாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, இந்தியன் ஆயில் காா்ப்ரேஷன் நிறுவனத்தின் குழாய் பதிப்பு திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...