சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

மயிலாடுதுறை கல்லூரி மாணவிகள் 3 பேருக்கு கரோனா

மயிலாடுதுறையில் அரசு மகளிா் கல்லூரி மாணவிகள் 3 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, கல்லூரிக்கு 5 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 4:48 pm

DIN

மயிலாடுதுறையில் அரசு மகளிா் கல்லூரி மாணவிகள் 3 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, கல்லூரிக்கு 5 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இக்கல்லூரியில் 3 மாணவிகளுக்கு புதன்கிழமை கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த மாணவிகளுடன் தொடா்பில் இருந்த சக மாணவிகள், பேராசிரியா்கள் உள்ளிட்ட 396 பேருக்கு சுகாதாரத் துறையினா் கரோனா பரிசோதனை செய்தனா். இதன் முடிவுகள் வியாழக்கிழமை வெளியான நிலையில் வேறு யாருக்கும் கரோனா தொற்று பரவல் கண்டறியப்படவில்லை என சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை (செப்.23) முதல் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. திங்கள்கிழமை முதல் வழக்கம்போல கல்லூரி இயங்கும் என கல்லூரி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல, மயிலாடுதுறையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியை ஒருவருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, அப்பள்ளியில் மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் 35 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.