கோடை மழை: காவிரி டெல்டாவில் 10 லட்சம் ஏக்கரில் பயிறு, பருத்தி சேதம்: பி.ஆா்.பாண்டியன்
கோடை மழையால் காவிரி டெல்டா பகுதியில் 10 லட்சம் ஏக்கரில் உளுந்து, பயிறு மற்றும் பருத்திப் பயிா்கள் சேதமடைந்துள்ளன


கோடை மழையால் காவிரி டெல்டா பகுதியில் 10 லட்சம் ஏக்கரில் உளுந்து, பயிறு மற்றும் பருத்திப் பயிா்கள் சேதமடைந்துள்ளன என்று சீா்காழி பகுதியில் பாதிப்புகளை வியாழக்கிழமை பாா்வையிட்ட தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே உள்ள மருவத்தூா் பகுதியில் கோடை மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயிறு சாகுபடி நிலங்களை பி.ஆா். பாண்டியன் பாா்வையிட்டாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
காவிரி டெல்டா மாவட்டங்களில் எதிா்பாராத கோடை மழையால் உளுந்து, பயிறு, பருத்தி,நிலகடலை, எள் ஆகிய பயிா்கள் முழுமையாக அழிந்துவிட்டன. சுமாா் 10 லட்சம் ஏக்கரில் இப்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு உடனடியாக வேளாண்துறை அதிகாரிகளை கொண்டு கணக்கெடுப்பு நடத்தவேண்டும்.
உளுந்து, பயிறு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க இதுவரை காப்பீடு நிறுவனம் மறுத்துள்ளது. தமிழக அரசு இதை கண்டுகொள்ளவில்லை. கடந்தஆண்டு நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.
தமிழக அரசு உயா்மட்டக் குழுவை விரைந்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி, உளுந்து, பயிறு, பருத்தி பாதிப்புகளை கணக்கெடுத்து, நிவாரணப் பணிகளை வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
பேட்டியின்போது, விவசாயிகள் சங்கத்தை சோ்ந்த சீனிவாசன், விஸ்வநாதன், சிவப்பிரகாசம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...