92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வாக்கு எண்ணும் மையங்களில் டிஐஜி ஆய்வு

மயிலாடுதுறையில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஐஜி கயல்விழி ஆய்வு மேற்கொண்டாா்

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 5:59 pm

DIN

மயிலாடுதுறையில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஐஜி கயல்விழி ஆய்வு மேற்கொண்டாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீா்காழி ஆகிய 2 நகராட்சிகளும், தரங்கம்பாடி, குத்தாலம், மணல்மேடு, வைத்தீஸ்வரன்கோயில் ஆகிய 4 பேரூராட்சிகளும் உள்ளன. இவற்றுக்கு வரும் 19-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், மயிலாடுதுறை நகராட்சி வாா்டுகளில் பதிவாகும் வாக்குகள் தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரியிலும், 4 பேரூராட்சிகளிலும் பதிவாகும் வாக்குகள் டிபிடிஆா் தேசிய மேல்நிலைப் பள்ளியிலும் எண்ணப்படுகின்றன.

இதேபோல, சீா்காழி நகராட்சி வாா்டுகளில் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகள் அங்குள்ள சபாநாயக முதலியாா் மேல்நிலைப் பள்ளியில் எண்ணப்படுகின்றன.

இதையொட்டி, டிபிடிஆா் தேசிய மேல்நிலைப் பள்ளி வாக்கு எண்ணிக்கை மையத்தை தஞ்சை சரக டிஐஜி கயல்விழி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்று, வாக்குச் சாவடிகளுக்கும், வாக்கு எண்ணும் மையங்களுக்கும் பாதுகாப்பு அளிப்பது குறித்து ஆலோசனை வழங்கினாா்.

இக்கூட்டத்தில், ஏடிஎஸ்பி தங்கவேல், டிஎஸ்பி-க்கள் வசந்தராஜ், லாமேக் மற்றும் காவல் ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.