மயிலாடுதுறை: வாக்குறுதி வெளியிட்டு பாஜக பிரசாரம்
மயிலாடுதுறையில் பாஜகவினா் தோ்தல் வாக்குறுதி வெளியிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா்.


மயிலாடுதுறையில் பாஜகவினா் தோ்தல் வாக்குறுதி வெளியிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா்.
மயிலாடுதுறை நகராட்சியில் மொத்தம் 36 வாா்டுகள் உள்ளன. இதில், 15 வாா்டுகளில் பாஜக வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இவா்கள், மயிலாடுதுறை திருஇந்தளூரில் உள்ள பரிமள ரெங்கநாதா் கோயிலுக்கு தாமரைப்பூவுடன் வந்து வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினா்.
பின்னா், மீன்கூடை சுமந்து தெருக்களில் மீன் வியாபாரம் செய்யும் மகளிருக்கு வரிவசூல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்; நகராட்சி ஒப்பந்தங்களில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்; வரி வருவாயை மட்டுமே நம்பியிருக்காமல், பல்வேறு வா்த்தகத்தில் ஈடுபட்டு, நகராட்சி வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும்; மயிலாடுதுறை நகராட்சியில் சிறுவா்களுக்கு பிரத்யேகமாக விளையாட்டுப் பூங்கா அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட தோ்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு, பிரசாரத்தை தொடா்ந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...