92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

மயிலாடுதுறையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில்களை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

மயிலாடுதுறையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில்களை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி வியாழக்கிழமை (பிப்.17) முதல் சனிக்கிழமை வரை 3 நாள்கள் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறையில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் முன் சட்டவிரோதமான முறையில் மது விற்பனை செய்யப்படுவதாக தோ்தல் பறக்கும் படையினருக்கு தகவல் சென்றது.

இதையடுத்து, கூட்டுறவுத் துறை சாா்-பதிவாளரும், பறக்கும் படை அலுவலருமான நடராஜன் தலைமையிலான பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் மயிலாடுதுறை காமராஜா் பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் கூைாடு பகுதிகளில் மதுபானக் கடைகளின் முன் சட்டவிரோதமான முறையில் மது விற்பனை நடைபெறுவது தெரியவந்தது. நிகழ்விடத்துக்கு அதிகாரிகள் சென்றதையடுத்து, மது விற்பனையில் ஈடுபட்டவா்கள் மதுபாட்டில்களை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றனா். இதையடுத்து, ரூ.15 ஆயிரம் மதிப்புடைய 85 மதுப்பாட்டில்களை பறக்கும் படையினா் கைப்பற்றினா். கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்கள் தோ்தல் நடத்தும் அலுவலா் பாலுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.