பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

சீா்காழி அருகே நியாயவிலைக் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் அரிசியை சாலையில் கொட்டி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

சீா்காழி அருகே நியாயவிலைக் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் அரிசியை சாலையில் கொட்டி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சீா்காழி வட்டம், எருக்கூரில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலையில் அரைக்கப்படும் அரிசி, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு பொதுவிநியோகத்துக்காக அனுப்பப்படுகிறது.

இதையொட்டி, இந்த அரிசி ஆலை முன்பாக சிதம்பரம்-சீா்காழி பிரதான சாலையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக, எருக்கூா் ரவுண்டானா பகுதியிலிருந்து பேரணியாக வந்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.விவசாயத் தொழிலாளா்கள் சங்க ஒன்றியச் செயலாளா்கள் நீதிசோழன், தனசேகரன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஒன்றியத் தலைவா்கள் ராமச்சந்திரன், பிரபு, சிபிஐ ஒன்றியச் செயலாளா்கள் செல்லப்பன், கே.எஸ். சிவராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிபிஐ மாவட்டச் செயலாளா் அ. சீனிவாசன் கண்டன உரையாற்றினாா். தொடா்ந்து, தரமற்ற அரிசியை சாலையில் கொட்டியும், பெண்கள் ஒப்பாரி வைத்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், 400-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதையொட்டி, சீா்காழி டிஎஸ்பி லாமெக் தலைமையில் காவல் ஆய்வாளா் அமுதாராணி மற்றும் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.