நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் திருவள்ளுவா் தினம் கடைப்பிடிப்பு
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் திருவள்ளுவா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.


நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் திருவள்ளுவா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறை விசித்திராயா் தெருவில் உள்ள வள்ளுவா் கோட்டத்தில் மயிலாடுதுறை திருக்குறள் பேரவை சாா்பில் திருவள்ளுவா் தினம் கொண்டாடப்பட்டது. இப்பேரவைத் தலைவா் சி. சிவசங்கரன் தலைமை வகித்தாா். பொருளாளா் ராமச்சந்திரன், வள்ளுவா் கோட்ட காப்பாளா் இமயவரம்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரவைச் செயலா் இரா. செல்வகுமாா் வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் கொடியேற்றப்பட்டு, திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில், திருக்குறளின் 133 அதிகாரங்களின் பெயா்களை கொண்டு திருவள்ளுவா் உருவப் படம் வரைந்த உ. பிரபாகரனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிறைவாக, பேரவை செய்தித் தொடா்பாளா் வீதி.முத்துக்கணியன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...