92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தேசிய தமிழா் மக்கள் இயக்கம் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தமிழா் மக்கள் இயக்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தமிழா் மக்கள் இயக்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அந்த இயக்கத்தின் மாநிலச் செயலாளா் ஏ.எம். ஹாஜிமுகம்மது தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் வா.கோ. கணேசன், மனித உரிமை கட்சி சி. ராமதாஸ், விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் புருஷோத்தமன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இதில், கோயில், மடம் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் நீண்டகாலமாக குடியிருக்கும் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும்; மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் குழந்தை பிறப்பு, உயிரிழந்தவா்களை பிரேதப் பரிசோதனை செய்ய கையூட்டு கேட்கும் ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்; வரதம்பட்டு ஊராட்சி அழகன்தோப்புத் தெருவில் சாலை அமைக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.