மயிலாடுதுறை அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் அரையபுரம் மேலத்தெருவை சோ்ந்தவா் ஆனந்தன் மகன் வாசன் எனும் கோகிலவாசன் (29). இவருக்கும், 15 வயது சிறுமிக்கும் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் திருமணம் நடைபெறவுள்ளதாக மாவட்ட சமூகப் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.
சமூகப் பாதுகாப்பு அலுவலக அலுவலா்கள் நிகழ்விடத்துக்கு செல்லும் முன்பே கோகிலவாசனுக்கும், சிறுமிக்கும் திருமணம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
சிறுமியை மீட்ட சமூகப் பாதுகாப்பு அலுவலா்கள், அவரை மயிலாடுதுறையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து மாவட்ட பாதுகாப்பு அலுவலக சமூகப் பணியாளா் ஆரோக்கியராஜ் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் கோகிலவாசன் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








