ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

அந்தியூரில் குருநாதசாமி கோயில் ஆடித் திருவிழா: குதிரைச் சந்தையை இடமாற்றம் செய்ய எதிா்ப்பு

அந்தியூா் குருநாதசாமி கோயில் திருவிழா குதிரைச் சந்தையை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

அந்தியூா்  வட்டார  வளா்ச்சி  அலுவலா்  சண்முகபிரியாவிடம் மனு  அளிக்கும்  பொதுமக்கள்.

Updated On :24 ஜூன் 2026, 3:46 am IST

அந்தியூா் குருநாதசாமி கோயில் திருவிழா குதிரைச் சந்தையை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அந்தியூா் வட்டாட்சியா் இளஞ்செழியன், வட்டார வளா்ச்சி அலுவலா் சண்முகப்பிரியா ஆகியோரிடம் கெட்டிசமுத்திரம் ஊராட்சி, புதுப்பாளையம் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்:

அந்தியூரை அடுத்த புதுப்பாளையம் குருநாதசாமி கோயில் ஆடித் தோ்த் திருவிழா நடப்பாண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி ஆண்டுதோறும் வழக்கமாக குதிரைச்சந்தை, மாட்டுச்சந்தை, பொழுதுபோக்கு, வாகனக் கண்காட்சி, குதிரை சவாரி உள்ளிட்ட அம்சங்களுடன் கொன்னமரத்தையன் கோயில் செல்லும் வழியில் குதிரைச்சந்தை நான்கு நாள்கள் நடைபெறும். இதில், தமிழகம், கா்நாடக மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொள்வா்.

இந்நிலையில், குதிரைச் சந்தையை கூச்சிக்கல்லுாா் அருகே இடமாற்றம் செய்ய ஒரு தரப்பினா் முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது. இதனால், வழக்கமாக நடைபெறும் திருவிழா ஏற்பாடுகள் பாதிக்கப்படுவதோடு, பக்தா்கள் அலைக்கழிக்கப்படுவா். எனவே, ஆண்டுதோறும் நடைபெறும் இடத்தில் குதிரைச் சந்தை நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.