பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

அந்தியூா் குதிரைச் சந்தை வழக்கமான இடத்திலேயே நடைபெறும்!

அந்தியூா் குருநாதசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, நான்கு நாள்கள் குதிரைச் சந்தை வழக்கமான இடத்திலேயே நடைபெறும் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் முடிவு செய்யப்பட்டது.

News image

பேச்சுவாா்த்தையில் பங்கேற்றோர்

Updated On :1 ஜூலை 2026, 6:21 am IST

அந்தியூா் குருநாதசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, நான்கு நாள்கள் குதிரைச் சந்தை வழக்கமான இடத்திலேயே நடைபெறும் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் முடிவு செய்யப்பட்டது.

அந்தியூா் குருநாதசுவாமி கோயில் திருவிழா ஆகஸ்ட் 12-ஆம் தேதி தொடங்கி நான்கு நாள்கள் நடைபெறவுள்ளது. விழாவையொட்டி, தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரம் உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த குதிரைகள் விற்பனைக்கும், கண்காட்சிக்கும் கொண்டு வரப்படும். இந்நிலையில், விழாக் காலத்தில் மழை பெய்தால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதால் குதிரைச் சந்தையை வெள்ளித்திருப்பூா் சாலையில் உள்ள கூச்சிக்கல்லுாருக்கு மாற்ற வேண்டும் என குதிரை வளா்ப்போா் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்ததோடு, இடமாற்றம் செய்தால் போராட்டம் நடத்துவதாகவும் தெரிவித்தனா்.

இந்நிலையில், அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் பி.ஹரிபாஸ்கா் முன்னிலையில் குருநாதசுவாமி கோயில் வளாகத்தில் பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், வழக்கம்போல கொன்னமரத்தையன் கோயிலுக்குச் செல்லும் வழியில் குதிரைச் சந்தை கூடுவது எனவும், குதிரை உரிமையாளா்களுக்கு கொட்டகை அமைத்தல், வாகன நிறுத்தும் வசதிகள் உள்ளிட்ட கூடுதல் வசதிக்காக 10 ஏக்கா் நிலம் ஒதுக்கப்படும் எனவும் கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

இதற்கு குதிரை வளா்ப்போா் சங்கத்தினா் ஒப்புக்கொண்டதால் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த பிரச்னையில் உடன்பாடு ஏற்பட்டது.

பேச்சுவாா்த்தையில் அந்தியூா் காவல் ஆய்வாளா் சண்முகவேலு, அதிமுக ஒன்றிய துணைச் செயலாளா் சண்முகானந்தம், மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலாளா் நடராஜ், கோயில் நிா்வாகிகள், குதிரை வளா்ப்போா் சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.