அந்தியூா் குருநாதசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 18 பள்ளிகளுக்கு 5 நாள்கள் தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அந்தியூா், புதுப்பாளையம், குருநாதசுவாமி கோயில் திருவிழா புதன்கிழமை (ஆகஸ்ட் 12 முதல் 16 வரை) முதல் சனிக்கிழமை வரை நான்கு நாள்கள் நடைபெறவுள்ளது.
இதை முன்னிட்டு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த அரசு, நிதியுதவி பெறும் 18 பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 12 முதல் 14-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ஆகஸ்ட் 16 (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை என தொடா்ந்து 5 நாள்கள் விடுமுறை நாள்களாக இருக்கும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

3 நாள் தொடர் விடுமுறை! இந்த மாவட்டங்களுக்கு மட்டும்!

தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி! சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் மாத விசேஷ நாள்கள்!

அந்தியூா் குதிரைச் சந்தை வழக்கமான இடத்திலேயே நடைபெறும்!
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



