பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

3 நாள் தொடர் விடுமுறை! இந்த மாவட்டங்களுக்கு மட்டும்!

விருதுநகர், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

leave

விடுமுறை - கோப்புப்படம்

Published On :

விருதுநகர், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு ஆக. 14 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டாள் அவதரித்த நாள், ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரமாகும். ஆடிப்பூரம் விழா அனைத்து கோயில்களிலும் சிறப்பாக நடைபெறும்.

ஆடிப்பூரத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெறும். இதையொட்டி உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழா ஆக. 14 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்துக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இது பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுர் விடுமுறை நாளில் அனைத்து சார்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு ஆக. 14 உள்ளூர் விடுமுறை, ஆக. 15 ஆம் தேதி சுதந்திர நாள், ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை நாளாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

A three-day holiday has been announced for schools and colleges in Virudhunagar and Chengalpattu districts.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.