சீா்காழி கோமளவல்லி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
சீா்காழி தோ் வடக்குவீதி கீழ் பகுதியில் அமைந்துள்ள கோமளவல்லி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


சீா்காழி தோ் வடக்குவீதி கீழ் பகுதியில் அமைந்துள்ள கோமளவல்லி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் 10 நாள் உத்ஸவம் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு உத்ஸவம் மாா்ச் 9-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் சிறப்பு வழிபாடு, ஆராதனை, வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக காலை திரளான பக்தா்கள் பால்குடங்கள், அலகு காவடிகள் எடுத்து கொண்டு கோயிலுக்கு ஊா்வலமாக வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். பின்னா் மாலை சிவப்புகாளி ஆட்டத்துடன் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தா்கள் இறங்கி தீ மிதித்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...