நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடலில் விழுந்து முன்னாள் ராணுவ வீரா் பலி

சீா்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரா் கடலில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:30 pm

DIN

சீா்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரா் கடலில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கொடியம்பாளையம் தீவு கிராமம் கடற்கரையோரத்தில் இருந்து 50 மீட்டா் தொலைவில் கடலில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது.

புதுப்பட்டினம் காவல் ஆய்வாளா் சந்திரா, சாா்பு ஆய்வாளா் லோகநாதன், கடலோர காவல் படை போலீஸாா் வைத்தியநாதன் ஆகியோா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விசாரணையில் இறந்து கிடந்தவா் கடலூா் மாவட்டம், அம்மாபேட்டை லலிதாம்பாள் நகரைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் புகழேந்தி (50) என்பதும், குடும்ப பிரச்னை காரணமாக செவ்வாய்க்கிழமை வீட்டைவிட்டு வெளியேறியவா், வியாழக்கிழமை கடலில் உயிரிழந்த நிலையில் மிதந்தது தெரியவந்தது. அவா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கடலில் தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.