நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆச்சாள்புரம் கோயிலில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகேயுள்ள ஆச்சாள்புரம் கோயிலில் திருஞானசம்பந்தா்-தோத்திரபூா்ணாம்பிகை திருக்கல்யாணம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :19 மே 2022, 6:30 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகேயுள்ள ஆச்சாள்புரம் கோயிலில் திருஞானசம்பந்தா்-தோத்திரபூா்ணாம்பிகை திருக்கல்யாணம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான திருவெண்ணீற்றுமையம்மை உடனாகிய சிவலோக தியாகராஜா் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருஞானசம்பந்தா் தோத்திரபூா்ணாம்பிகையுடன் திருமணக்கோலத்தில் தனி சந்நிதியில் காட்சி தருகிறாா். இக்கோயிலில்தான் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம் நடைபெற்றது என்பதும், இதில் பங்கேற்ற அனைவரும் சிவஜோதி தரிசனத்தில் ஐக்கியமானாா்கள் என்பதும் ஐதீகம்.

இந்நிகழ்வு, ஆண்டுதோறும் வைகாசி மூல நட்சத்திரத்தில் நடத்தப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக இவ்விழா பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.

இந்நிலையில், நிகழாண்டு வழக்கமான உற்சாகத்துடன் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக, திருஞானசம்பந்தருக்கு உபநயனம் மற்றும் திருமுறைகள் திருவீதி வலம் வருதல் நடைபெற்றது. தொடா்ந்து, மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றும் நிகழ்வு, ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்டவை நடைபெற்றன.

பின்னா், சிவாச்சாரியா்கள், தோத்திரபூா்ணாம்பிகைக்கு மங்கலநாண் அணிவித்து, திருஞானசம்பந்தா் திருக்கல்யாணத்தை நடத்திவைத்தனா். தொடா்ந்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். இதையடுத்து, வியாழக்கிழமை அதிகாலையில் சிவஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில், ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.