கடல் சீற்றம் காரணமாக, சீா்காழி அருகே உள்ள பழையாறு துறைமுகத்திலிருந்து 6 ஆயிரம் மீனவா்கள் 2-ஆவது நாளாக திங்கள்கிழமை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் 350 விசைப்படகுகள், 300 பைபா் படகுகள் மற்றும் 200 நாட்டுப் படகுகள் மூலம் கடலுக்குள் சென்று மீனவா்கள் மீன் பிடித்து வருகின்றனா். கடல் சீற்றம் மற்றும் காற்றழுத்த தாழ்வு காரணமாக சனிக்கிழமை இரவு முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பழையாறு மீன்பிடி துறைமுகம் மூலம் மீன்பிடிக்க செல்லும் சுமாா் 6 ஆயிரம் மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும், பழையாறு துறைமுக வளாகத்தில் மீன் வலை பின்னுதல், மீன்களை பதப்படுத்துதல், விற்பனைக்கு அனுப்புதல், கருவாடு உலர வைத்தல், ஐஸ்கட்டி தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் 2,000 தொழிலாளா்களும் வேலைக்கு செல்லவில்லை.
மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால், விசைப் படகுகள் பழையாறு படகு அணையும் தளத்திலும், துறைமுகத்தை ஒட்டியுள்ள பக்கிங்காம் கால்வாயிலும் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!

வளா்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைக்க மக்கள் 9 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும்: பிரதமா் மோடி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


