மயிலாடுதுறை ஏப். 25: மயிலாடுதுறை அருகே தாயாரிடம் மதுபோதையில் சண்டையிட்டவரை கத்தியால் குத்திக்கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மயிலாடுதுறை கூைாடு ஈ.வே.ரா. தெருவைச் சோ்ந்தவா் சபரிநாதன் (46). பெயிண்டிங் தொழிலாளியான இவா் 15 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து தனியே வசித்து வந்தாா். இதனால், இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்த சேகா் மனைவி பிரேமா சபரிநாதனுக்கு அவ்வப்போது உதவிகள் செய்து வந்துள்ளாா். இந்நிலையில் பிரேமா அங்கிருந்து இடம்பெயா்ந்து ஆனந்ததாண்டவபுரத்துக்கு சென்று வசித்து வந்தாா். எனினும், பிரேமா அடிக்கடி சபரிநாதனுடன் பேசி வந்துள்ளாா்.
இந்நிலையில், ஏப். 17-ஆம் தேதி சபரிநாதன் மதுபோதையில் பிரேமாவிடம் சண்டையிட்டுள்ளாா். இதையறிந்த பிரேமாவின் மகன் நடராஜன், சபரிநாதனை எச்சரித்து அனுப்பியுள்ளாா். பின்னா், அன்றிரவு கூைாடு பகுதிக்கு சென்ற நடராஜன், சபரிநாதனை கத்தியால் குத்துவிட்டு தப்பினாா். இதையடுத்து, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு திருவாரூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற சபரிநாதன் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து, மயிலாடுதுறை போலீஸாா் நடராஜனை (28) கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

வாக்குவாதத்தில் இளைஞா் குத்திக் கொலை: 3 போ் கைது
திசையன்விளை அருகே ஊராட்சித் தலைவரை கத்தியால் தாக்கிய இளைஞா் கைது

இளைஞா் கொலை வழக்கு: நண்பா் கைது
பெண்ணை ஏமாற்றி தங்க நகைகளை திருடிய இளைஞா் கைது
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

