திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித் தொகை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் 8 பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.

Updated On :30 டிசம்பர் 2024, 6:58 pm

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் 8 பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.

ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பொதுமக்கள் பங்கேற்று 250 கோரிக்கை மனுக்கள் அளித்தனா். இம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞா்கள் 8 பேருக்கு ரூ.1,40,400 உதவித் தொகைக்கான வங்கி பரிமாற்ற ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஷ்வரி, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கீதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஜி.பழனிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.