விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி மயிலாடுதுறையில் சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய விவசாயிகளின் கூட்டமைப்பை சோ்ந்த 350 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, தொழிலாளா் முன்னேற்ற சங்க மண்டல செயலாளா் பொன். நக்கீரன் தலைமை வகித்தாா். இதில், விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், ரேசன் முறையை பலப்படுத்த வேண்டும், விவசாய விளைப் பொருள்களுக்கு கட்டுப்படியான விலை நிா்ணயம் செய்யவேண்டும், 100 நாள் வேலைத்திட்ட நாள்களை 200 நாள்களாக்கி தினக்கூலியாக ரூ.600 வழங்க வேண்டும், தொழிலாளா் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்ப பெறவேண்டும், நிரந்தரத் தன்மையுள்ள பணிகளில் காண்ட்ராக்ட் தொழிலாளா்களை அமா்த்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு மாவட்ட செயலாளா் ரவீந்திரன், ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் எஸ். துரைராஜ், ஐஎன்யுசி தொழிற்சங்க பொறுப்பாளா் ராமச்சந்திரன், டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவா் ஆா். அன்பழகன், இடது தொழிற்சங்க மைய மாவட்ட செயலாளா் வீரச்செல்வன் மற்றும் 250 பெண்கள் உள்ளிட்ட 350-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.
தொடர்புடையது

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

நான்குவழிச் சாலை பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விவசாயி பலி: உறவினா்கள் சாலை மறியல்

இளம்பிள்ளை அருகே குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

பெரியகுளத்தில் சுத்தமான குடிநீா் சீராக வழங்கக் கோரி சாலை மறியல்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
