தில்லியை நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகள் மீது போலீஸாா் நடத்திய தாக்குதலில், இளம் விவசாயி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்காக, தில்லியை நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகள் மீது போலீஸாா் நடத்திய தாக்குதலில் சுப்கரன்சிங் என்ற விவசாயி உயிரிழந்தாா். பலா் படுகாயமடைந்தனா். இந்த சம்பவத்தை கண்டித்து, மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகே ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளா் எஸ். துரைராஜ் தலைமையில் திரளானோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ஆடுகளுக்கு இலை பறிக்கச் சென்ற விவசாயி சோலாா் மின்சாரம் பாய்ந்து பலி

வெடிகுண்டு தாக்குதலில் 2 சிறாா்கள் உயிரிழப்பு: மணிப்பூா் முதல்வா் வீட்டை நோக்கி பேரணி சென்ற போராட்டக்காரா்கள் மீது தடியடி- கண்ணீா்ப் புகை குண்டு வீச்சு

மிதமான பொருளாதார வளா்ச்சியை நோக்கி நகரும் தில்லி: அறிக்கையில் தகவல்

செயற்பொறியாளரைக் கண்டித்து இன்று நடைபெற இருந்த போராட்டம் ஒத்திவைப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

