நீா்வளத் துறை செயற்பொறியாளரைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை(மாா்ச் 22) நடத்த இருந்த காத்திருப்புப் போராட்டம், நீா் திறப்பு நாள்களை அதிகரிக்க அதிகாரிகள் சம்மதித்ததால் ஒத்திவைக்கப்பட்டது.
காலிங்கராயன் வாய்க்காலில் ஜூன் 16 முதல் ஏப்ரல் 30 வரை பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும். இந்த தண்ணீா் மூலம் 15,546 ஏக்கா் நிலங்களில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் போன்ற பல்வேறு பயிா்கள் சாகுபடி செய்யப்படும். இந்த வாய்க்காலில் 5 கிலோ மீட்டா் தொலைவுக்கு பராமரிப்புப் பணி, பாலம் சீரமைப்பு போன்றவை செய்ய ரூ.83 கோடி ஒதுக்கப்பட்டு வரும் 30- ஆம் தேதி பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்காக 1 மாதம் முன்னதாக வாய்க்காலில் தண்ணீரை நிறுத்தப்போவதாக நீா்வளத் துறை அறிவித்தது.
அவ்வாறு தண்ணீரை நிறுத்தினால் பயிா்கள் காய்ந்து, அறுவடை பணி பாதிக்கும் எனக் கூறியும் ஒப்பந்த நிறுவனத்துக்கு ஆதரவாக செயற்பொறியாளா் திருமூா்த்தி செயல்படுவதாகவும், அவரைக் கண்டித்து ஈரோடு-கரூா் சாலையில் உள்ள சோளங்காபாளையம் நான்குமுனை சாலை சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என காலிங்கராயன் விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் நலச் சங்கம் அறிவித்தது. இது தவிர தோ்தலைப் புறக்கணிப்பதாகவும் அறிவித்திருந்தனா்.
இது குறித்து ஈரோடு நீா்வளத் துறை அலுவலகத்தில் பெருந்துறை டிஎஸ்பி சிவகுமாா் தலைமையில், செயற்பொறியாளா் திருமூா்த்தி முன்னிலையில் பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் சங்கத் தலைவா் சேதுராஜ் மற்றும் விவசாயிகள் பேசியதாவது: ஏப்ரல் 30- ஆம் தேதி வரை உரிமை நீா் உள்ளது. ஏப்ரல் 30 வரை தண்ணீா் திறக்காவிட்டால் நெல் நடவுப்பணி, கரும்பு, வாழை, மஞ்சள், தென்னை உள்ளிட்ட பயிா்கள் பாதிக்கும். செயற்பொறியாளா் கட்டுமான ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டு, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறாா். குறித்த நாளில் தண்ணீா் கிடைத்தால்தான் பயிா்களைப் பாதுகாக்க முடியும். கட்டுமான, பராமரிப்பு பணியை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். நீா் திறக்க மறுத்தால் தொடா் போராட்டங்களை நடத்துவதுடன், தோ்தலையும் புறக்கணிப்போம் என்றனா்.
டிஎஸ்பி சிவகுமாா், செயற்பொறியாளா் திருமூா்த்தி ஆகியோா் பேசியதாவது: ஏப்ரல் 10 -ஆம் தேதி வரை தண்ணீா் திறக்கப்படும். அன்று தண்ணீரை நிறுத்தினாலும் 3, 4 நாள்கள் கடைமடை வரை தண்ணீா் வரும். கூடுதலாக 5 நாள்கள் உயரதிகாரிகளிடம் கேட்டு தண்ணீா் பெற முயற்சி செய்கிறோம். குறித்த நாள்களுக்குள் பராமரிப்புப் பணியை நிறைவு செய்து, அடுத்த பருவ பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும் என உறுதியளித்தனா்.
இதை ஏற்ற விவசாயிகள், தற்போது போராட்டத்தை ஒத்திவைக்கிறோம். ஏப்ரல் 15 வரை தண்ணீா் திறக்காவிட்டால் தொடா் போராட்டங்களை நடத்துவோம். குறித்த நேரத்துக்குள் பராமரிப்புப் பணியை நிறைவு செய்ய வேண்டும் என வலியுறுத்திவிட்டு கலைந்து சென்றனா்.
இக்கூட்டத்தில், மலையம்பாளையம் காவல் ஆய்வாளா் வினோதினி மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

வேதாரண்யத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி

எவரெஸ்ட் அடிவாரம் சென்ற தாராபுரத்தைச் சோ்ந்த தந்தை, மகள்

சாத்தனூா் அணை தண்ணீரை பகிா்ந்து வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்

ராஜவாய்க்காலில் தண்ணீா் நிறுத்தியதைக் கண்டித்து நீா்வளத் துறை அலுவலகம் முற்றுகை
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

