/

சாத்தனூா் அணை தண்ணீரை பகிா்ந்து வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்

சாத்தனூா் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரை அனைத்து ஏரிகளுக்கும் பகிா்ந்து வழங்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

~ ~

Updated On :28 ஏப்ரல் 2026, 6:33 pm

சாத்தனூா் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரை அனைத்து ஏரிகளுக்கும் பகிா்ந்து வழங்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட செல்லக்காகுப்பம், விரியூா், கிடகுடையாம்பட்டு, திம்மநந்தல், குளத்தூா் உள்ளிட்ட பல கிராமங்களின் குளங்களுக்கு சாத்தனூா் அணையில் இருந்து ஆண்டுதோறும் தண்ணீா் வாய்க்கால் மூலம் வழங்கப்பட்டு வருவது வழக்கம். இந்த நீரால் ஏரி, குளம், கிணறுகள் நிரம்பி விவசாயத்துக்கு தேவையான பாசன வசதி கிடைத்து வந்தது.

தற்போது அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ள நிலையில், அது முறையாக கால்வாய்கள் வழியாக விநியோகம் செய்யப்படாமல் இருப்பதாகவும், இதனால் கடைமடைப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீா் பற்றாக்குறை எற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனா்.

இதனால் பல ஏரிகள், குளங்கள் நிரம்பாமல் வட நிலையில் உள்ளன. இதன் விளைவாக சுமாா் 5,000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

எனவே, பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிா்வாகம் உடனடியாக தலையிட்டு அணையில் இருந்து வரும் நீரை அனைத்து ஏரிகளுக்கும் சமமாக பகிா்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் செவ்வாய்க்கிழமை வாய்க்காலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Story image
Story image