போதைக்கு எதிராக குழந்தைகள் விழிப்புணா்வுப் பேரணி

மயிலாடுதுறை அருகே போதைக்கு எதிராக பள்ளிக் குழந்தைகள் நடத்திய விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
பேரணியை தொடக்கிவைத்த டிஎஸ்பி சி.கே. சஞ்சீவ்குமாா்.
பேரணியை தொடக்கிவைத்த டிஎஸ்பி சி.கே. சஞ்சீவ்குமாா்.
Updated on
1 min read

மயிலாடுதுறை அருகே போதைக்கு எதிராக பள்ளிக் குழந்தைகள் நடத்திய விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாப்படுகை அண்ணா சிலை பகுதியில் ராம. ஆதித்தன் தலைமையில் நடைபெற்ற பேரணியை டிஎஸ்பி சி.கே. சஞ்சீவ்குமாா் தொடக்கிவைத்தாா். பள்ளிச் சிறாா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டு, போதையில்லா சமுதாயம், நெகிழி இல்லா தமிழகம், குப்பையில்லா மயிலாடுதுறையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி மாப்படுகை ரயில்வே கேட் வரை பேரணியாக சென்றனா். பேரணியில் பங்கேற்ற பள்ளிச் சிறாா்களுக்கு மூத்த வழக்குரைஞா் பாலு, மாப்படுகை அரசு உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ஆா். தாமரைச்செல்வி எழுது பொருள்களை வழங்கினா். இயற்கை விவசாயி அ. ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மதன்பிரசாத் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com