வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் வியாபாரம் தொடங்க கடனுதவி
மயிலாடுதுறை மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் வியாபாரம் தொடங்க மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது


மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் வியாபாரம் தொடங்க மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது என ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
8-ஆம் வகுப்பு தோ்ச்சிபெற்ற 18 முதல் 45 வயது வரையிலான பொதுப் பிரிவினரும், 18 முதல் 55 வயது வரையிலான சிறப்பு பிரிவினரும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வியாபாரத்துக்கான திட்டமதிப்பீட்டில் பொதுப்பிரிவினா் 10 சதவீதமும், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா், முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத்திறனாளிகள், மகளிா் மற்றும் திருநங்கைகள் 5 சதவீதமும் தங்களது பங்களிப்பாக செலுத்த வேண்டும்.
ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும். விருப்பமுள்ளவா்கள் ஜ்ஜ்ஜ்.ம்ள்ம்ங்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ன்ஹ்ங்ஞ்ல் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு இணை இயக்குநா், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியரகம் (4-வது தளம்) மயிலாடுதுறை, தொலைபேசி எண் 04364-212295-இல் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...