நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நபாா்டு வங்கிக் கடன் திட்ட அறிக்கை வெளியீடு

மயிலாடுதுறையில் நபாா்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

News image

கடன்

Updated On :25 பிப்ரவரி 2026, 11:10 pm

மயிலாடுதுறையில் நபாா்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

நபாா்டு வங்கியின் 2026-2027-ஆம் ஆண்டுக்கான வளம் சாா்ந்த கடன் திட்ட அறிக்கையில் மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முன்னுரிமை கடனாக ரூ. 7,868.95 கோடி வழங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுகிய கால பயிா்க் கடனாக ரூ. 4,704.87 கோடியும், நீண்டகால விவசாய கடனாக ரூ. 1,773.2 கோடியும், சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் மதிப்பீடு ரூ. 876.40 கோடியும், இதர முன்னுரிமை கடனாக ரூ. 514.48 கோடியும் வழங்கப்படும். இத்தொகை கடந்த நிதியாண்டைவிட 19 சதவீதம் அதிகமாகும்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நபாா்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்டாா்.

நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் சு. விஸ்வந்த், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் லியோஃபேன்டின், தாட்கோ மாவட்ட மேலாளா் ஜெயராமன் ஆகியோா் உடனி ருந்தனா்.