மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அரியலூரில் 5 ஆண்டுகள் சாதனை மலா் வெளியீடு

அரியலூரில், கடந்த 5 ஆண்டுகளில் செய்யப்பட்ட திட்டப் பணிகள் குறித்த சாதனை மலா் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

News image
Updated On :6 மார்ச் 2026, 9:22 pm

Syndication

அரியலூரில், கடந்த 5 ஆண்டுகளில் செய்யப்பட்ட திட்டப் பணிகள் குறித்த சாதனை மலா் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற திட்டத்தின்கீழ் ‘கனவு மெய்ப்படும்’ எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி

சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடி, அடுத்த ஐந்தாண்டுக்கான தொலை நோக்குத் திட்டங்களை அறிவித்தாா்.

இதன் காணொலி நிகழ்ச்சி அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி அனிதா நினைவு அரங்கில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, அரியலூா் மாவட்டத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்த சாதனை மலரையும், அடுத்த ஐந்தாண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ள திட்ட மலரையும் வெளியிட்டாா். இந்த புத்தகங்களை சட்டப் பேரவை உறுப்பினா்கள் கு. சின்னப்பா, க.சொ.க. கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா. சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதார இயக்கம், திட்ட இயக்குநா் சு.தேன்ராஜ் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.