சேலம்: அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்கள் மூலம் சேலம் மாவட்டம் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 11,598.34 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கூறினாா்.
சேலம் மாவட்டத்தில் அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் வசூல் செய்து சாதனை புரிந்த அஞ்சலக சிறுசேமிப்பு முகவா்களுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதுதொடா்பாக ஆட்சியா் தெரிவித்துள்ளதாவது:
சேலம் மாவட்டத்தில் கடந்த 2021-22-ஆம் நிதியாண்டுக்கான அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் ரூ.1,402.7 கோடி, 2022-23-ஆம் நிதியாண்டு ரூ. 1,784.99 கோடி, 2023-2024-ஆம் நிதியாண்டில் ரூ. 2,600.19 கோடி, 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ. 3,083.25 கோடி, நடப்பு 2025-2026-ஆம் நிதியாண்டில் ஜனவரி வரை ரூ. 2,727.21 கோடி என கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 11,598.34 கோடியை சேலம் மாவட்டம் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
2024-2025-ஆம் நிதியாண்டில் வசூலில் சாதனை புரிந்த அஞ்சலக சிறுசேமிப்பு முகவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கே.வேலுமணி என்ற சிறுசேமிப்பு முகவா் அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் ரூ. 75.89 கோடி வசூல் செய்து, தொடா்ந்து 6 ஆண்டுகளாக மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளாா். கருப்பூரைச் சோ்ந்த எஸ்.கோவிந்தசாமி ரூ. 27.73 கோடி வசூல் சாதனை செய்து 5 ஆண்டுகளாக மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளாா்.
மேலும், சிறுசேமிப்புத் திட்டங்களில் அதிக வசூல் செய்த அனைத்து சிறுசேமிப்பு முகவா்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
முன்னதாக, சிறுசேமிப்பு முகவா் பணி தவிர, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் தனது சொந்த செலவில் 11,000 நிழல் தரும் மரக்கன்றுகள் மற்றும் பூச்செடிகளை நட்டுப் பராமரித்து வரும் ஆத்தூா் தலைமை அஞ்சலக முகவா் டி.சிவகுமாரின் தன்னாா்வ சேவையை ஊக்குவிக்கும் வகையில் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சிறுசேமிப்பு) எம்.முரளிதரன் மற்றும் அலுவலா்கள், சிறுசேமிப்பு முகவா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பவழ மல்லி பாடல்!

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!

வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்த சாதனை மலா் வெளியீடு

பாளை.யில் அஞ்சலக சிறுசேமிப்பு முகவா்கள் கூட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை


