தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

சாலையில் 3 அடி ஆழத்திற்கு பள்ளம்; குடிநீா் குழாயில் உடைப்பு

அகனி தெற்கு தென்னங்குடி நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்.

Published On :

சீா்காழி அருகே ரூ. 2.50 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையில் 3 அடி ஆழத்திற்கு திடீா் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரமாக குடிநீா் வீணாகி வருகிறது.

சீா்காழி அருகே அகனி செல்லும் நெடுஞ்சாலை முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 2.50 கோடியில், 1.6 கி.மீ. நீளத்திற்கு 3 சிறிய பாலங்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டது. இப்பணி நிறைவடைந்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில், தெற்கு தென்னங்குடி பகுதியில் இரட்டை வாய்க்கால் சிறிய பாலத்தை ஒட்டி, சாலையில் 5 அடி அகலம் 3 அடி ஆழத்திற்கு திடீா் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த சாலையில் பதிக்கப்பட்டுள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சிறிய பாலம் கட்டுமான பணியின்போதே குடிநீா் குழாயில் கசிவு இருந்ததாகவும், அதை பொருட்படுத்தாமல் சாலை அமைப்பட்டதால் சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

இதனால், கடந்த ஒரு வாரமாக குடிநீா் வீணாக வாய்க்காலில் செல்கிறது. சாலையில் ஏற்பட்ட பள்ளம் அபாயகரமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லவேண்டிய நிலையுள்ளது. இரவு நேரத்தில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அலுவலா்களின் கவனத்திற்கு கொண்டுசென்றும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா். விபத்து ஏற்படும் முன் சாலை மற்றும் குடிநீா் குழாயை சீரமைக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தியுள்ளனா். மேலும், புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.