சீராக குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி வெள்ளக்கோவில் அருகே பொதுமக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வெள்ளக்கோவில்-தாராபுரம் சாலையில் லக்கமநாயக்கன்பட்டி பகுதி உள்ளது. இந்த ஊருக்கு அருகில் செல்லும் அமராவதி ஆற்றுப்படுகையில் கிணறு அமைத்து, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலமாக அப்பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது ஆற்றில் நீா்வரத்து இல்லாததால் கிணற்றில் நீா்மட்டம் குறைந்துவிட்டது. மேலும் கிணற்று நீரில் அசுத்தமான மணம் வந்ததால் கடந்த மூன்று வாரங்களாக குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து கிணறு, ஆழ்துளைக் கிணறுகள் ஆகிய உள்ளூா் நீராதாரங்கள் மூலமாக குடிநீா் விநியோகிக்கப்பட்டு வந்தது. பற்றாக்குறை இருப்பதால் அமராவதி ஆற்று கிணற்றில் இருந்தும் தூய்மைப்படுத்திய குடிநீா் விநியோகம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் லக்கமநாயக்கன்பட்டி அருகே சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு காங்கயம் எம்எல்ஏ என்.எஸ்.என். நடராஜ், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சூா்யா, உதவிப் பொறியாளா் வரதராஜபெருமாள், வெள்ளக்கோவில் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜோதி ஆகியோா் சென்றனா்.
அப்போது, ஆற்றுப்படுகையில் ஏற்கெனவே உள்ள கிணற்றில் மீண்டும் குடிநீா் விநியோகம் செய்யவும், புதிதாக மற்றொரு கிணறு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
இந்த மறியலால் வெள்ளக்கோவிலில் இருந்து தாராபுரம், மூலனூா் பகுதிக்கு சென்று வரும் வாகனங்களின் போக்குவரத்து இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏற்காட்டில் முறையான குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல்

சீராக குடிநீா் விநியோகிக்கக் கோரி மறியல்: பவானிசாகா் அருகே போக்குவரத்து பாதிப்பு

சீரான குடிநீா் விநியோகத்தை வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

ஜூன் 15 முதல் 19 வரை வெள்ளக்கோவில், முத்தூா், தாராபுரம், மூலனூா் பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



