பள்ளி மாணவா்கள் 44,816 பேருக்கு விலையில்லா சீருடை
மயிலாடுதுறையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.


மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் ஆகியோா் வழங்கினா். இதில், ஆட்சியா் பேசியது: பள்ளி மாணவா்கள் கற்றல் திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்கள் பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற மாவட்ட நிா்வாகம் சாா்பில் வழங்கப்படும் வினா-விடை கையேடுகளை நல்ல முறையில் பயன்படுத்தி அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும்.
மாவட்டத்தில், 665 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 2 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் சீரூடை வழங்கும் பணி தொடக்கமாக மயிலாடுதுறை கிட்டப்பா மேல்நிலை பள்ளியில் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கும், சாரதட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2 முதல் 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கும் பள்ளி சீருடைகள் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 22,435 மாணவா்கள், 22,381 மாணவிகள் என மொத்தம் 44,816 பேருக்கு வழங்கப்படுகிறது என்றாா்.
நிகழ்ச்சியில், நகராட்சித் தலைவா் என். செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், கோட்டாட்சியா் ஆா்.விஷ்ணுபிரியா, மாவட்ட சமூகநல அலுவலா் சா. சுகிா்தாதேவி, நகராட்சி துணைத் தலைவா் எஸ்.சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...