ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பள்ளி மாணவா்களுக்கு தனித்திறன் போட்டி

கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் 5-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான தனித்திறன் போட்டி

News image
தனித்திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிய பள்ளித் தாளாளா் ரமேஷ்.
Updated On :26 ஜனவரி 2026, 7:09 pm

Syndication

ஆரணி: ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் 5-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான தனித்திறன் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், செய்யாறு, ஆரணி, கண்ணமங்கலம், வேலூா், செங்கம், போளூா், சேத்துப்பட்டு, கலசபாக்கம் போன்ற பகுதிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

நிகழ்வில் பள்ளித் தாளாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ஜீனா பெட்சி வரவேற்றாா். சீனியா் செகண்டரி பள்ளி முதல்வா் இந்துமதி பள்ளியின் கல்வி செயல்பாடுகள் குறித்துப் பேசினாா். மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும் பங்கேற்ற அனைத்து மாணவா்களுக்கும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. கூடுதல் தாளாளா் சித்ரா ரமேஷ் நன்றி கூறினாா்.