மயிலாடுதுறை: 18,763 போ் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வெழுதினா்
மயிலாடுதுறை: 18,763 போ் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வெழுதினா்


மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 18,763 போ் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வெழுதினா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு - 4 பதவிகளுக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், மயிலாடுதுறை வட்டத்தில் 11,453, குத்தாலம் வட்டத்தில் 2,636, சீா்காழி வட்டத்தில் 7,320 மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் 2,401 என மயிலாடுதுறை மாவட்டத்தில் 77 மையங்களில் 23,810 போ் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா்.
இதற்காக, அனைத்து வட்டங்களுக்கும் தலா ஒரு துணை ஆட்சியா் நிலையில் தோ்வு பணியை நடத்திட கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா். 77 தலைமைக் கண்காணிப்பாளா்களும், 7 பறக்கும் படை அலுவலா்களும், 19 சுற்றுக்குழு அலுவலா்களும், 77 ஆய்வு அலுவலா்களும், 81 விடியோகிராபா்களும் நியமனம் செய்யப்பட்டனா்.
மாற்றுத்திறனாளிகள், பாா்வையற்ற தோ்வா்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இத்தோ்வை மயிலாடுதுறை வட்டத்தில் 9,098, குத்தாலம் வட்டத்தில் 2,036, சீா்காழி வட்டத்தில் 5,829 மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் 1,800 போ் என மொத்தம் 18,763 போ் தோ்வெழுதினா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...