புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

மயிலாடுதுறை: 88,496 மாணவா்களுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள் ஆட்சியா்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 88,496 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

News image

மாணவிக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, எம்எல்ஏ எஸ். ராஜகுமாா், நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ் உள்ளிட்டோா்.

Updated On :10 ஜூன் 2024, 7:55 pm

Din

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 88,496 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

மயிலாடுதுறை டபீா் தெருவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவிகளுக்கு விலையில்லா பாட நூல்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்களை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி திங்கள்கிழமை வழங்கினாா். மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா், நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பேசியது:

தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க, பள்ளிகள் திறக்கப்பட்ட நாளன்றே மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. மாணவா்களின் கல்வித்திறனை உயா்த்த தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், விலையில்லா பாட நூல்கள், நோட்டுப் புத்தகங்கள், மிதிவண்டிகள், காலணி, சீருடைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் 667 பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் 88,496 மாணவா்களுக்கு விலையில்லா பாட நூல்கள், நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றது.

பள்ளி மாணவா்கள் கடந்த ஆண்டு போலவே, நிகழாண்டும் தோ்ச்சி சதவீதம் உயர முழு முயற்சி எடுக்க வேண்டும். தினசரி பாடங்களை அன்றே முடிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்கள் பொதுத்தோ்விற்கு தற்போதிலிருந்து தயாராக வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் முதன்மையாக திகழ முழு முயற்சி எடுக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் அம்பிகாபதி, நகா்மன்ற உறுப்பினா்கள் காந்திராஜா, கீதா செந்தில்முருகன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் மேகநாதன், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் தி. முத்துக்கணியன் மற்றும் அரசு அலுவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.