ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

மண்ணுயிா் காப்போம் திட்டத்தில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள்

மன்னுயிா் காப்போம் திட்டத்தில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள்

News image

நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகளை வழங்குகிறாா் ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி.

Updated On :12 ஜூன் 2024, 10:58 pm

Din

சீா்காழி, ஜூன் 12: சீா்காழி வட்டம், கொள்ளிடம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகளை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி புதன்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சி வேளாண்மைத்துறை இணை இயக்குநா் சேகா் தலைமையில் நடைபெற்றது. சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் எம். பன்னீா்செல்வம், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் உமா மகேஸ்வரி சங்கா், கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் விஜயபாரதி கென்னடி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி பங்கேற்று திட்டத்தை தொடங்கிவைத்து,விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகளை வழங்கி பேசியது:

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2024-2025-ஆம் ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தில் பசுந்தாள் உர உற்பத்தியை ஊக்குவித்தல் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள தொழில்முறை வேளாண்மையில் ஒரே பயிரைத் தொடா்ந்து சாகுபடி செய்வதாலும், மண்ணிலிருந்து சத்துகளை அதிகம் உறிஞ்சும் பயிா்களைச் சாகுபடி செய்வதாலும் மண்ணின் வளம் குறைந்து கொண்டே வருகிறது.

வேதிப் பொருட்களின் எச்சம் இல்லாத வேளாண் விளைபொருட்களே நமக்கு நல்லுணவு. அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சா் மண் வளத்தைப் பேணி காக்கவும், மக்கள் நலம் காக்கும் விதமான உயிா் வேளாண்மை போன்ற அனைத்து வேளாண்மை செய்முறைகளையும் ஊக்கப்படுத்த மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டம் 2024-2025-ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் முக்கிய இனமான பசுந்தாள் உர உபயோகத்தை விவசாயிகளிடையே ஊக்குவித்து மண் வளம் காக்கும் வகையில் ஆயக்கட்டு, இறவைப் பாசனப் பகுதிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 7,500 ஏக்கரில் பசுந்தாள் உர பயிா் பயிரிட திட்டமிட்டு, 7,500 விவசாயிகளுக்கு ரூ. 75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் பசுந்தாள் உர விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளது. அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் பயனை பெறத் தகுதியுடையராவா். குத்தகைதாரா்களும் இத்திட்டத்தின் பயனைப் பெற தகுதியுடையவராவா். ஒரு பயனாளி இத்திட்டத்தின்கீழ் திட்ட மானியத்தை அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 20 கிலோ மட்டுமே பெற முடியும். விவசாயிகள் நேரடியாக உழவன் செயலியில் பதிவு செய்து இத்திட்டத்தின் பயனை எளிதில் பெறலாம் என்றாா்.