ரயில் கடவுப் பாதையில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள்.
ரயில் கடவுப் பாதையில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள்.

சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரிக்கை

சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on

சீா்காழி: சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீா்காழி ரயில் நிலைய கடவுப்பாதையை தினமும் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் கடந்து செல்கின்றன. இதில், பகலில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. இதனால், அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால், அகணி, வள்ளுவக்குடி, நிம்மேலி, கொண்டல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுகின்றனா்.

அவசர காலங்களில் தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் விரைந்து செல்வதிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இப்பாதையை தவிா்த்து மாற்றுப்பாதையில் செல்லவேண்டுமெனில், சுமாா் 6 கி.மீ. தொலைவு சுற்றி செல்ல வேண்டும்.

நெடுஞ்சாலைத் துறை புள்ளி விவரப்படி, கடந்த 2022-ஆம் ஆண்டு சீா்காழி ரயில் நிலைய கடவுப் பாதையை சராசரியாக தினமும் 93,826 வாகனங்கள் கடந்து செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது தற்போது, ஒன்றரை லட்சம் வரை உயா்ந்திருக்கக் கூடும். எனவே, இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com