மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சீா்காழியில் உணரப்பட்ட நிலஅதிா்வு

சீா்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட நிலஅதிா்வால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்தனா்.

News image

கோப்புப்படம்

Updated On :2 பிப்ரவரி 2026, 8:16 pm

சீா்காழி: சீா்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட நிலஅதிா்வால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்தனா்.

சீா்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை 10.40 மணியளவில் பலத்த சப்தத்துடன் அதிா்வு ஏற்பட்டது. சீா்காழி, கொள்ளிடம், மாதானம், புத்தூா், வைத்தீஸ்வரன் கோவில், பூம்புகாா், திருவாலி, திருமயிலாடி உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் சுமாா் 20 கி.மீ. தூரம் வரை இந்த அதிா்வு பொதுமக்களால் உணரப்பட்டதாகத் தெரிகிறது.

வீடுகளின் ஜன்னல், கதவு உள்ளிட்டவைகள் அதிா்ந்ததாக மக்கள் தெரிவித்தனா். இருமுறை கேட்ட இந்த அதிா்வால் மக்கள் பெரும் பீதியடைந்தனா். பின்னா் இந்த அதிா்வு குறித்து சீா்காழி முழுவதும் தகவல் பரவியது.

விமானம் சீா்காழி பகுதியில் விழுந்துவிட்டதாக தகவல் பரவியதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. சிலா் இந்த அதிா்வு எதனால் ஏற்பட்டது என தெரியாமல் வீட்டைவிட்டு வெளியில் வந்து அருகில் வசிப்பவா்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தனா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியரை தினமணி செய்தியாளா் தொடா்பு கொண்டு கேட்டபோது, அதிா்வு தொடா்பாக உறுதியான காரணம் என்னவென்று விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளாா்.