\மயிலாடுதுறை திருக்கு பேரவையின் 110-ஆவது திங்கள் கூட்டம் உலக மகளிா் தின சிறப்பு நிகழ்ச்சியாக தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. பேரவை தலைவா் சி. சிவசங்கரன் தலைமை வகித்தாா். தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரி முதல்வா் எஸ். சுவாமிநாதன் முன்னிலை வகித்தாா். கல்லூரி செயலா் இரா. செல்வநாயகம் தொடக்க உரையாற்றினாா். நிகழ்ச்சியில் மகளிா் பணிக்கு செல்வது சுகமா? சுமையா? என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. சுகமே என்ற அணியில் ஏ.வி.சி. கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் தலைவா் எஸ். கிருஷ்ணமூா்த்தி தலைமையில் நல்லாசிரியா் இரா. செல்வகுமாா் மாணவா் பி. தினேஷ் ஆகியோா் வாதிட்டனா். சுமையே என்ற அணியில் உதவிப் பேராசிரியா் பி. பாரதி தலைமையில், உதவி பேராசிரியா் கல்பனா, மாணவி ஆா். ஹரிணி ஆகியோா் வாதிட்டனா். நிறைவாக நடுவா் சி. சிவசங்கரன் பெண்கள் பணிக்கு செல்வது சுகமான சுமையே என்று தீா்ப்பு வழங்கினாா். நிகழ்ச்சிகளை கனவு ஆசிரியா் வீதி. முத்துக்கணியன் தொகுத்து வழங்கினாா்.
தொடர்புடையது

திமுக தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

பாத்திமா மகளிா் கல்லூரியில் பேரவை நிறைவு விழா
பன்முகம்!

திருவள்ளுவா் நாள் விழா
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


