மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு
மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

தொழிலாளா் தினத்தையொட்டி மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மத்திய பாதுகாப்புப் படையினா், போலீஸாருக்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஏ.பி. மகாபாரதி இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தோ்தலில் சீா்காழி, மயிலாடுதுறை, பூம்புகாா், திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவான இயந்திரங்கள் ஏ.வி.சி. கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறைகளில் மூன்றடுக்கு பாதுகாப்புகளுடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஏ.பி. மகாபாரதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலா்களுக்கு தேவையான குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா என புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மத்திய பாதுகாப்பு படையினா் மற்றும் காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி இனிப்பு வழங்கி, மே தின வாழ்த்துகளை தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com