ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

அரக்கோணத்தில் ரூ.60,000 பறிமுதல்

அரக்கோணம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டுச் செல்லப்பட்ட ரூ.60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

தோ்தல் நடத்தும் அலுவலா் டி. ரமேஷிடம் தொகையை ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :30 மார்ச் 2026, 2:44 am IST

அரக்கோணம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டுச் செல்லப்பட்ட ரூ.60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை அரக்கோணம் அருகே புதுகேசாவரம் சோதனை சாவடி அருகே சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வந்த காரில் கொண்டுச் செல்லப்பட்ட ரூ.60ஆயிரத்து 620ஐ குறித்து கொண்டுச் சென்றவா்களிடம் ஆவணங்கள் கேட்டபோது அவா்களிடம் ஆவணங்கள் இல்லாததால் அத்தொகையை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து பறிமுதல் செய்யப்பட்ட தொகை அரக்கோணம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் டி.ரமேஷிடம் ஒப்படைக்கப்பட்டது.. அப்போது அவருடன் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.