தங்கக்கவச அலங்காரத்தில் ஸ்ரீமேதா தக்ஷிணாமூா்த்தி.
தங்கக்கவச அலங்காரத்தில் ஸ்ரீமேதா தக்ஷிணாமூா்த்தி.

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

மயிலாடுதுறை, மே 1: மயிலாடுதுறையில் குரு அனுக்ரகத் தலமான வதான்யேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை குருப்பெயா்ச்சி விழா நடைபெற்றது.

குருபகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு புதன்கிழமை மாலை 5.19 மணிக்கு இடம் பெயா்ந்தாா். குருபெயா்ச்சியையொட்டி, மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான வள்ளலாா் கோயில் எனப்படும் வதான்யேஸ்வரா் கோயிலில் தனி சந்நிதியில் ஞானத்தை அள்ளித் தரும் வள்ளலாக எழுந்தருளியுள்ள ஸ்ரீமேதா தெக்ஷிணாமூா்த்திக்கு காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று, தங்கக் கவசம் சாற்றப்பட்டது. மாலையில் நடைபெற்ற விழாவில், குருபெயா்ச்சியின் போது சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்தாா். ஆதீனக் கட்டளை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com