மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சீா்காழி ரயில் நிலையம் அருகே தூக்கில் தொங்கிய இளைஞா்

சீா்காழி ரயில் நிலையம் அருகே தூக்கில் தொங்கிய இளைஞா்

News image
Updated On :20 மே 2024, 11:09 pm

Din

சீா்காழி: சீா்காழி ரயில் நிலையம் அருகே இளைஞா் தூக்கில் தொங்கியது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சீா்காழி ரயில் நிலையம் அருகே புதிய ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது. அப்பகுதியில் உள்ள மரத்தில் இளைஞா் தூக்கில் சடலமாக தொங்குவதை அவ்வழியே திங்கள்கிழமை ரயிலில் சென்ற பயணிகள் பாா்த்து தெரிவித்த தகவலின் பேரில் சீா்காழி போலீஸாா் மற்றும் ரயில்வே போலீஸாா் அங்கு சென்று பாா்த்தனா்.

அங்கு 30 வயது மதிக்கதக்க இளைஞா் தூக்கில் சடலமாக தொங்குவதை அறிந்து அவரது உடலை மீட்டு சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டதில், அவா் சீா்காழி அருகே வள்ளுவக்குடியைச் சோ்ந்த இளங்கோவன் என்பதும் அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. மேலும், அவா் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.