மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தருமபுரம் ஆதீனத்தில் சமய பயிற்சி வகுப்பு தொடக்கம்

தருமபுரம் ஆதீனத்தில் சமய பயிற்சி வகுப்பு தொடக்கம்

News image
Updated On :20 மே 2024, 11:11 pm

Din

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் சமய பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

மயிலாடுதுறையில் உள்ள 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனம் தமிழையும், சைவத்தையும் வளா்ப்பதில் பெரும்பங்காற்றி வருகிறது. இந்நிலையில், ஆதீன குருமுதல்வா் குருஞானசம்பந்தா் குருபூஜை பெருவிழா திங்கள்கிழமை தொடங்கி 11 நாள்கள் நடைபெறுகிறது. இந்த 11 நாள்களும் ஆதீனத்திருமடத்தில் தினசரி கருத்தரங்கம் மற்றும் சமய பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். மேலும், வேத சிவாகம புராண இதிகாச தோத்திர சாத்திரக் கருத்தரங்கம் மற்றும் திருநெறிய தெய்வத் தமிழ் மாநாடும் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், சமய பயிற்சி வகுப்பை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடக்கிவைத்து பேசினாா். பயிற்சி முடிவில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். இதில், ஆதீனக் கட்டளை தம்பிரான்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.