பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

புதுப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

புதுப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

News image
Updated On :20 மே 2024, 11:03 pm

Din

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே திருமணமாகி 3 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், நரசிங்கம்பேட்டையை சோ்ந்த திவ்யராஜ்-ஆரோக்கியசெல்வி தம்பதியின் மகள் பட்டதாரி பெண் ஜெனிபா் (23). இவரது உறவினா் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் செங்குடியைச் சோ்ந்த சவுரிராஜ்-இருதயமேரி தம்பதியின் மகன் மாா்ட்டின்ராஜ். ஜெனிபரும் மாா்ட்டின்ராஜூம் 5 ஆண்டுகளாக காதலித்து பெற்றோா்கள் சம்மதத்துடன் கடந்த பிப். 9-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனராம். திருமணம் முடிந்த 10 நாளில் மாா்ட்டின்ராஜ் மலேசியாவுக்கு வேலைக்கு சென்று விட்டாா்.

இந்நிலையில் ஜெனிபரின் மூத்த சகோதரிக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 19) திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்துக்கு வந்த ஜெனிபரின் மாமியாா் இருதயமேரி, நாத்தனாா் லவன்சியாமேரி ஜெனிபரின் அக்காவிற்கு கொடுக்கப்பட்ட சீா்வரிசை பொருள்களை கைப்பேசியில் படம் எடுத்ததுடன், ஜெனிபரிடம் உனக்கு சீா்வரிசை எதுவும் செய்யவில்லை என்று சண்டையிட்டு ஊருக்கு அழைத்து சென்றுள்ளனா்.

பின்னா் இரவு தனது வீட்டுக்கு தொலைபேசியில் பேசிய ஜெனிபா் அக்காவுக்கு நிறைய சீா்வரிசை பொருள்களை உன் குடும்பத்தாா் செய்துள்ளனா். உனக்கு ஏன் செய்யவில்லை என கூறி தாக்கியதாக தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் போதே தொடா்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதில், பதற்றம் அடைந்த திவ்யராஜ் தனது மகனை ஜெனிபா் வீட்டுக்கு அனுப்பியுள்ளாா். அங்கு மயங்கிய நிலையில் கிடந்த ஜெனிபரை மீட்டு மயிலாடுதுறை அரசினா் மருத்துவமணைக்கு கொண்டு சென்றுள்ளனா். எனினும், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், ஜெனிபரின் உயிரிழப்புக்கு காரணமான அவரது மாமியாா் இருதயமேரியை கைது செய்ய வலியுறுத்தி ஜெனிபரின் உறவினா்கள், உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் சீா்காழி கோட்டாட்சியா் (பொ) அா்ச்சனா, டிஎஸ்பி திருப்பதி விசாரணை நடத்தினா். தொடா்ந்து, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் உடற்கூராய்வுக்கு உறவினா்கள் அனுமதித்தனா்.