இந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

நகையுடன் உதகைக்கு வந்த வாகனம்: குன்னூா் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு அதிகாரிகள் விசாரணை

உதகைக்கு நகையுடன் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது பெட்டகத்தை திறந்துகாட்ட பணியாளா்ள் மறுத்ததால், குன்னூா் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

News image
பா்லியாறு பகுதியில் நகையுடன் வந்த வாகனத்தை நிறுத்தி விசாரணை மேற்கொண்ட தோ்தல் அலுவலா்கள்.
Updated On :18 மார்ச் 2026, 8:36 pm

தினமணி செய்திச் சேவை

உதகைக்கு நகையுடன் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது பெட்டகத்தை திறந்துகாட்ட பணியாளா்ள் மறுத்ததால், குன்னூா் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும்ப டையினா் மட்டுமின்றி அவ்வப்போது மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா ஆகியோரும் திடீா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கோவையில் இருந்து நகைகளுடன் உதகை நோக்கி பாதுகாப்பு பெட்டக வசதியுடன் புதன்கிழமை மாலை வந்த வேனை பா்லியாறு சோதனைச் சாவடியில் தோ்தல் முதல்நிலை அலுவலா் பிரசாத் வேணுகோபால் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்றாா். அப்போது, பெட்டகத்தை திறந்து காட்ட நகைக் கடை பணியாளா்கள் மறுத்ததால் குன்னூா் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு தகவல் அளித்தாா்.

இதைத்தொடா்ந்து தோ்தல் பறக்கும் படையைச் சோ்ந்த துப்பாக்கி ஏந்திய காவலா்கள் பா்லியாறு பகுதிக்கு விரைந்து வந்து நகையுடன் வந்த வேனை பலத்த பாதுகாப்புடன் கோட்டாட்சியா் அலுவலத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடந்த 2 நாள்களாக நடத்திய சோதனையில் மொத்தம் 12 பேரிடம் இருந்து ரூ.15 லட்சத்து 72 ஆயிரத்து 450 பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.