வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

News image

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழாவையொட்டி நடைபெற்ற கொடியேற்றம்.

Updated On :20 மே 2024, 11:16 pm

Din

மயிலாடுதுறை: தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் அமைந்துள்ள ஞானாம்பிகை உடனாகிய ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா மே 20 முதல் மே 30-ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறுகின்றன. விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை யஜமான அனுக்ஜை, சுவாமி அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்ற நிலையில் திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

விழாவில், ஞானாம்பிகை சமேத ஞானபுரீசுவரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் கோயில் கொடிமரத்தின் முன் எழுந்தருளச் செய்யப்பட்டனா். அங்கு, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ரிஷபக் கொடி ஏற்றப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில், ஆதீனக் கட்டளைகள் ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான், ஸ்ரீமத் திருஞானசம்பந்தா் தம்பிரான், ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான், ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் உள்ளிட்ட தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

விழாவில், தினசரி சுவாமி வீதியுலாவும், மே 23-ல் யானைமீது திருமுறை பெட்டகம் வைத்து வீதியுலா, மே 24-ல் சகோபுர தரிசனம், மே 26-ல் திருஞானசம்பந்தா் குருபூஜை விழா, மே 28-ஆம் தேதி காலை 8 மணிக்கு தோ் உற்சவம் நடைபெறவுள்ளது. மே 29-ல் சபாநாயகா் தீா்த்தம் கொடுக்கும் உற்சவம், மே 30-ல் மௌன உற்சவம் மற்றும் மே 31-ல் சண்டிகேஸ்வரா் உற்சவம் நடைபெற்று ஜூன் 1-ஆம் தேதி பஞ்சமூா்த்திகள் யதாஸ்தானம் எழுந்தருளல் நடைபெறவுள்ளது.