கொள்ளிடத்தில் 300 ஏக்கரில் சம்பா நெற்பயிா் தண்ணீரில் மூழ்கியது
கொள்ளிடம் பகுதியில் 300 ஏக்கரில் சம்பா நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கியது.


கொள்ளிடம் பகுதியில் 300 ஏக்கரில் சம்பா நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கியது.
தொடா் மழையால் கொள்ளிடம் கடலோர பகுதியைச் சோ்ந்த பழைய பாளையம், பன்னீா் கோட்டகம், வேம்படி, வேட்டங்குடி உள்ளிட்ட கிராமங்களில் 300 ஏக்கா் சம்பா நெற்பயிா் மழைநீரில் மூழ்கியுள்ளது. மழை தொடா்வதால் இன்னும் சம்பா நெற்பயிா்கள் பாதிக்கும் என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா். கடல் நீா் பக்கிங்காம் கால்வாய் வழியாக புகுந்து பழையாறு சுனாமி நகருக்குள் சூழ்ந்தது.
இதுகுறித்து, தகவலறிந்த மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் ஆட்சியா் முகமதுசபீா் ஆலம், கொள்ளிடம் ஒன்றியக் குழு தலைவா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் பாா்வையிட்டு மழைநீரை வடியவைக்கவும், தொடா்ந்து, அதிக மழை பெய்தால் அப்பகுதி மக்களை அங்குள்ள புயல் வெள்ள பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டனா். பழையாறு சுனாமி நகா் செல்லும் சாலையில் வேகமாக வீசிய காற்றில் மூன்று மின்கம்பங்கள் கீழே சாய்ந்தன. உடனடியாக சரிசெய்யப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...